அமைச்சு பதவிக்கு மஹிந்த அழுத்தமென்கிறார் சித்தார்த்தன்!

இனப்பிரச்சனை தீர்வாக சமஷ்டி உள்ளிட்ட அதிகார பரவலாக்கல் முறைமைகளை வலியுறுத்திக் கொண்டிருக்காமல், பேசாமல் ரணில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவும் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளவும் மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்தியா இந்த விடயத்தில் கூடுதல் அக்கறையெடுக்க வேண்டுமெனவும்  கூட்டமைப்பினருக்கு இதில் அழுத்தம் கொடுக்கவும் மஹிந்த கோரியுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது ஆதரவாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்த மஹிந்த இனப்பிரச்சனைக்கு  தீர்வாக சமஷ்டி, மற்றும் பல்வேறு வடிவங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் விட சிறந்த தீர்வு- தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணைந்து, அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதே. இப்பொழுது பாருங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைத்து அபிவிருத்தி வேலைகளில் பங்காளியாக இருக்கிறது. இதன்மூலம் அங்கு பல பிரச்சனைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வெளியில் இருந்தே, இவ்வளவு பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றால், அமைச்சு பதவியை எடுத்தால் இன்னும் நிலைமையில் முன்னேற்றம் வரும்.

இலங்கை இனப்பிரச்சனை சிக்கலை தீர்க்க அவசியமாக செய்ய வேண்டியது, கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்பதே. இந்தியாவிற்கு இந்த விடயத்தில் கூடுதல் பொறுப்புள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுத்து, அமைச்சு பதவியை ஏற்க வைக்க வேண்டுமென கோரியதாக இந்திய தூதர் தன்னிடம் தெரிவித்ததாகவும் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

No comments