ஜெனீவா செல்கிறார் விக்கினேஸ்வரன்?

வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலதிக  காலஅவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார். அதன் பின்னரே, அவர் ஜெனிவாவுக்குப் பயணமாவார் என்றும் கொழும்பு ஆங்கில  வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

No comments