வெள்ளைச் சிற்றூர்த்தியா? எங்களிடம் இருந்ததேயில்லை! கோட்டாபாய

வெள்ளைச் சிற்றூர்த்தியில் ஆட்களைக் கடத்தும் கலாசாரம் முன்னெடுக்கப்பட்டதாக கூறுவதில் எந்தவித உண்மையில்லை. அந்த காலப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு சிற்றூர்த்தி கூட எம்மிடம் இருந்ததேயில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய  ராஜபக்ச தெரிவித்தார். 

உடுநுவர  பிரதேசத்தில் ஹேலிய அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் பொய்யுரைத்துள்ளார்.

பயங்கரவா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் எமக்கு காணப்பட்டது. மறுபுறம் பாதாள குழுவினரது செயற்பாடுகளும் அதிகரித்த வண்ணமே காணப்பட்டது. 

இந்நிலையில் சர்வதேச  நாடுகள் எவ்வாறு பயங்கரவாத யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க அதனையே   நாங்களும் முன்னெடுத்தோம்.  இதன் பொழுது பல்வேறு  குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டது.

வெள்ளைச் சிற்றூர்த்திக் கடத்தல் கலாச்சாரம் என்பது பயங்கரவாத செயற்பாடுகளின் போது  முன்னெடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில்  எங்களிடம் வெள்ளை நிறத்திலான சிற்றூர்த்திகள் எதுவும் இருந்ததில்லை என்றார்.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை சிற்றூர்தியில் நடைபெற்ற கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் கலாசாரத்தின் பிதா மகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே  என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments