காணி பெமிட்டுக்கு மரண சான்றிதழாம்?


வடகிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது தேவைக்கான ஆவணங்களை பெற முற்படுகின்ற போது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக வன்னியில் தமது காணிகள் தொடர்பான ஆவணங்களிற்கென மாவட்ட செயலகங்களிற்கு சென்றிருந்த குடும்பங்களிற்கு காணாமல் போனவர் உயிரிழந்தார் என மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வந்தால் அந்தக் காணிகளது பத்திரங்கள் தரப்படுமென அதிகாரிகளால் கூறப்படுகின்றது.

ஏற்கனவே தமக்கான நீதி கோரி போராடிவரும் மக்களை வருடக்கணக்கில் கண்டுகொள்ளாதிருக்கின்ற அரசு அவர்களது வாய்களை மூட மரண சான்றிதழை திணிந்து ஒப்படைக்க முற்பட்டுள்ளதாகவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


No comments