வெகு விரைவில் ஆட்சி மாற்றம்

வெகுவிரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தலதா மாளிகையில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலம்பெயர் விடுதலைப்புலிகளின் நோக்கங்கள் நல்லாட்சி அரசினால் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியே இன்றும் இடம்பெறுகின்றது.

அரசுக்கு எதிரான பேரணி நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. வெகுவிரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும்” – என்றார்.

No comments