கச்சதீவு திருவிழா 15,16 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்மாதம் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கச்சதீவு செல்ல 2,500 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.இவர்களுள் 225 பேர் நாட்டுப்படகில் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் இவ்விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உட்பட பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து மட்டுமே செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுப்படகுகளில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டுப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்தாண்டு  படகிலும் பக்தர்கள் செல்ல உள்ளனர்.

No comments