கிளிநொச்சியில் தொடர்ந்து அடிவாங்கும் சிறிதரன் அணி

கிளி.கரைச்சி பிரதேசசபையினால் ஆட்டோ சங்கம் மற்றும் வியாபாாி ஒருவருக்கு எ திராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றினால் வழங்கப் பட்ட தீா்ப்பினை யாழ்.மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. 
கரைச்சி பிரதேச சபையினால் கிளிநொச்சி மாவட்ட ஆட்டோ சங்கத்தினருக்கு எதி ராகவும், வியாபாாி ஒருவருக்கு எதிராகவும் கரைச்சி பிரதேசபை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. 
இந்த வழக்கில் ஆட்டோ சங்கத்தினருக்கும், வியாபாாிக்கும் எதிராக தீா்ப்பு வெளி யானது. அந்த தீா்ப்பினை எதிா்த்து ஆட்டோ சங்கத்தினரும், வியாபாாியும் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தொடா்ந்திருந்தனா். 
இந்த வழக்கு மீதான தீா்ப்பு யாழ்.மேல் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்டது. இதன் போது கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீா்ப்பை இரத்து செய்யப்பட்டு ள்ளதாக வியாபாாிகள் தொிவிக்கின்றனா்.  

No comments