தலையில் குட்டுவாங்க தொடங்கினார் சுரேன் இராகவன்!


சிங்கள அரசிடம் நல்ல பெயர் வாங்கச்சென்று தலையில் குட்டுவாங்கியுள்ளார் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.

அண்மைக்கால பேரின அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்ட ஒருவர் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் என ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இதேவேளை ஜெனீவாவிற்கு சென்றப்போது அவருக்கு அரசாங்கத்தால் செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தில், 1000 பவுன்ஸ்களை அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்ததாகவும் தகவல் ஒன்று உலாவிவருகின்றது.

இந்நிலையில் திரிபுப்படுத்தப்பட தகவலை வெளியிட்டமைக்காக சர்வதேச அளவில் கண்டனத்துக்கு அவர் உள்ளாகியுள்ளார்.

கோசிப் இணையங்களில் வெளிவருகின்ற தகவல்களை ஜநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியதாக தெரிவித்த கருத்து கடும் கண்டனங்களிற்குள்ளாகியுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம் அதில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையென்ற புள்ளி விபரத்தை டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் அரசு காணிகளை விடுவித்துவிட்டதாக சுரேன் இராகவன் தெரிவித்த கருத்திற்கு டக்ளஸ் பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

No comments