மாற்றுத் திட்டங்களை நிராகரித்து பிரித்தானிய நாடாளுமன்றம்

பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் மாற்றுத் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா நாடாளுமன்றில் முன்வைத்தனர்.

நேற்றுப் புதன்கிழமை 8 மாற்று ஒப்பந்தங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29 ஆம் தேதி முடிவடைகிறது. 

பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியப் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இரு முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பாண்மை ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்துவிட்டது.

பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற மே மாதம் 22 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. இல்லை ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் வரும் ஏப்பிரல் 12 ஆம் திகதிக்குள் வெளியேறியாக வேண்டும் என  ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.

No comments