இலங்கையின் திட்டத்தை பின்பற்ற தமிழக நீதிபதிகள் யோசனை!
தமிழகத்தில் செயற்கை மழையை ஏற்படுத்தும் திட்டம் ஏதும் உள்ளதா என மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது .
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவரால் பொதுநல மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது அதில், தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாததால், நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிகளுக்கு சென்றது. இதனால், மனிதர்களும், கால்நடைகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். அணைகள் தூர்வாராமல் இருப்பதால், தண்ணீரை சேமிக்க முடியாத நிலையும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு குறித்தன விசாரணையின் போது நீதிபதிகள், மரங்கள் அனைத்தையும் வெட்டியும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை மழையை நாடுவதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ள அவர்கள் இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டியுள்ளார்.
இந்த செயற்கை மழை திடடம் இலங்கையில் முன்னோட்டம் பார்க்கப்பட்டு அது வெற்றியளித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் இது நடைமுறைப்படுத்த நீதிபதிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இது அங்கு சாத்தியமாகுமா என சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.

Post a Comment