தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து பாய்ந்து 25 பேர் பலி!

பங்களாதேஷ்  தலை நகர் டாக்காவில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அவர்களில் சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க கட்டடத்திலிருந்து குதித்ததனால் வீழ்ந்து  மரணமடைந்தனர்.

70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில்
கட்டடத்தின் உள்ளேயும் பலர்  சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கட்டடத்தின் உயர்மாடிகளை நேற்று கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் உலங்குவானூர்தி துணையோடும் 22 தீயணைப்புப் படைப் பிரிவுகளுடன்
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

No comments