மாணவர்கள் மயிரிழையில் மீட்பு! தீ வைத்த ஓட்டுனர் கைது!

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் யணித்த பாடசாலைப் பேருந்தை பெற்றோல் ஊற்றித் தீ மூட்டி பற்ற வைத்துள்ளார் பேருந்து ஓட்டுனர்.

பேருந்து சாலையில் சென்றபோது, பேருந்தின் ஓட்டுநர்  திடீரென மாணவர்களை நோக்கி இன்று எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட விரும்புகிறேன் என பலத்த குரலில் கத்தியுள்ளார்.

மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் அகதிகள் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவர், பேருந்தினுள் சிறிதளவு பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். 

மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒரு மாணவன் தனது தந்தையிடம், பேருந்து கடத்தப்பட்ட சம்பவத்தை விபரித்துள்ளார். அதைத் தொடர்ந்து குறித்த மாணவனின் தந்தை காவல்துறைக்கு தகவல் வழங்கினார்.

காவல்துறையினர் விரைந்து செயல்பட்டதால் குறித்த பேருந்து துரத்திச் சென்று மடக்கப்பட்டது. மாணவர்கள் பேருந்தின் சாளரங்கள் உடைக்கப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டனர். இதேநேரம் பேருந்து முழுவதும் எரிந்து கருகியது. அருகில் நின்ற மகிழுந்து ஒன்றும் முழுமையாக எரிந்துள்ளது.

மீட்கப்பட்ட மாணவர்களில் 12 மாணவர்கள் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

பேருந்தைக் கடத்தி மாணவர்களை கொல்ல முயன்ற 47 வயதுடைய டிரைவரையும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இத்தாலியர் என்பது தெரியவந்தது. 

மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இத்தாலிய உள்துறை மந்திரி மற்றும் துணை பிரதமரின் கடுமையான அகதிகள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் வகையிலும் பேருந்தை கடத்தி தீ வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

அவர் மீது கடத்தல், கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டு விடுதலையானவர் என்பது தெரியவந்துள்ளது.

No comments