வடகிழக்கும் பௌத்த கிராமங்களாம்?


வடகிழக்கில் பௌத்த மத அடையாளங்களை நிறுவுவதில் படைத்தரப்பும் அரசும் காட்டிவந்த தீவிரத்தின் உண்மை தன்மை வெளிப்பட தொடங்கியுள்ளது.அவ்வாறு பௌத்த மத சின்னங்கள் உள்ள கிராமங்களை பௌத்த கிராமமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பு விட உடன் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலகங்களிற்கும் சுற்றுநீரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் எந்தவொரு கிராமத்திலும் பௌத்த சின்னங்களோ அல்லது பௌத்த மதத்தவர்களோ வாழ்ந்தால் அக் கிராம சேவகர் பிரிவு பௌத்த கிராமங்களாக கருதப்படும். அதன் பிரகாரம் மாவட்டந்தோறும் கானப்படும் பௌத்த சின்னங்கள் , பௌத்த குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த சின்னங்கள் இரவோடு இரவாக முளைத்து வருவதுடன்; படையினர் தமது வழிபாட்டிற்கு என்னும் பெயரிலும் பௌத்த சின்னங்களை நிறுவி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு பௌத்த சின்னம் கானப்பட்டாலும் அது பௌத்த கிராமம் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுவது தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலாகவே பார்க்கப்படுகின்றது. 

No comments