இப்போதுதான் இலங்கை கண்டுபிடித்தது பல்குழல் பீரங்கி!


விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கைகளின் போது தமது உள்ளுர் தயாரிப்பான பல்குழல் பிரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் சுமார் இருபது வருட காலத்தின் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட மல்ட்டி பரல் றொக்கட் லோஞ்சர்  மற்றும் பல்குழல் ஏவுகணைகளின் மாதிரிகள் மைத்திரிபால சிறிசேனாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாம். 

கடந்த கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி அ பிவிருத்தி நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள  முதலாவது பல்குழல் பீரங்கி மற்றும் ஏவுகணை கடந்த 71வது இலங்கையின் தேசிய தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டன.

ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வாவினால் இந்த மாதிரி மைத்திரியிடம் கையளிக்கப்படடிருந்தது.

No comments