இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டுமாம்; அதிமுக

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என அதிமுக அறிவித்துள்ளது.அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் மேலும் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே மத்திய அரசை வலியுறுத்துவோம். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு. காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்
மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.எனும் பல முக்கிய அம்சங்களோட வெளியாகியுள்ளது.

No comments