மக்கள் கூட்டத்தில் பாரவூர்தி புகுந்தது! 30 பேர் பலி!

குவாட்டமாலாவில் பாரவூர்தி மக்கள் கூட்டத்தில் புகுந்ததில் 30 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

குவாட்டமாலா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள சொலோல மாகாணத்தில் நகுலா நகரசபைப் பகுதியில் கூடி நின்ற மக்கள் மீதே பாரவூர்தி புகுந்துள்ளது.

ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

குவாட்டமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் தனது கீச்சகப்பக்கத்தில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கறியள்ளார்.


No comments