180 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது - ஆயுதங்களும் மீட்பு



மொறட்டுவ, ராவதாவத்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 180 கோடி ரூபா பெறுமதியான 150 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் தலைவர் மகேந்துரே மதூஷின் நெருங்கிய சகாவின் வீட்டிலிருந்தே இந்தப் பெரும்தொகை ஹெரோயின் போதைப்பொருள்  மீட்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று (11) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், ரீ 56 ரகத்தைச் சார்ந்த சுமார் 3000 ரவைகள், தொலைபேசி உள்பட பெருந்தொகையான பொருள்களும் கைப்பற்றப்பட்டன என அவர் குறிப்பிட்டார். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடு, மாகந்துரே மதூஷ் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் சகாவான கெவுமா என்ற பாதாள உலகக்குழு உறுப்பினருக்கு சொந்தமானது.

500 கோடி பெறுமதியான வைரத்தைத் திருடியதாகக் கூறப்படும் கெலும் இந்திக்க என்ற சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ஹெரோயின் தொடர்பில் தெரியவந்த்து.

No comments