தென்தமிழீழ மக்களை விரட்டும் காட்டும் யானைகள்!


கிழக்கு தமிழீழத்தின் எல்லைக்கிராமங்களிiனை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் மத்தியில் காட்டு யானைகள் கட்டுப்பாடின்றி மக்கள் குடியிருப்புக்களிற்குள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலத்தில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாகவுள்ளது. தற்போது பெரும்பொக நெல் அறுவடை செய்யும் காலத்தில் காட்டுயானைகளின் வரவு அதிகமாகவுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிவுக்குட்ட ஆயித்தியமலை, உன்னிச்சை பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவு தாந்தாமலை குழுவினமடு வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவு களுமுந்தன் வெளி விவேகானந்தபுரம் 39,ம் கிராமங்கள் போன்ற பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள் தினமும் உட்புகும் காட்டு யானைகளால் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

காடுகளைக் கடந்து வந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து இருப்பிடங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்படுவதோடு நீண்ட காலப் பயன் தரும் மரங்களான தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவையும் வீட்டுத் தோட்டப் பயிர்களும் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்படுவதாக கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் தினமும் இரவில் கிராமங்களுக்குள் ஊடுருவி நடமாடித் திரியும் காட்டு யானைகளால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

No comments