சந்திரிகா தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார்?


சுதந்திரக்கட்சியின் பிடியை பண்டாரநாயக்க குடும்பம் முற்றாக இழுந்துவருகின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய சிறீPலங்கா பொதுஜன பெரமுன கட்சியோடு இணைந்து பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான சந்திரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். 

சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரக் கட்சியை மகிந்த ராஜபக்சவின் குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் அடகு வைக்க முடியாதென்றும் சந்திரிக்கா கூறியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன

இது குறித்து கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிக்கா பேசியுள்ளார். கட்சியின் தலைவர் என்ற முறையில் சுதந்திரக் கட்சியை தன்னிச்சையாக வழிநடத்த முடியாதென சந்திரிக்கா கடும் தொனியில் பேசியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர்.

அதனை அறிந்து கொண்ட சந்திரிக்கா மைத்திரிபால சிறிசேனவுடன் தர்க்கப்பட்டதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்ச. மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டில் இருந்து சுதந்திரக் கட்சியை வேறுபடுத்தி கட்சியை பாதுகாக்க சந்திரிக்கா முற்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களுக்கு சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. இதனால் அதிருப்தியடைந்த சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க முற்பட்டிருந்தார்.

ஆனாலும் கட்சியின் உள்ள தனக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர்கள் சிலரின் ஆலோசனையுடன் சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சந்திக்கா ஈடுபட ஆரம்பித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி பயனளிக்கவில்லையானால், புதிய கட்சி ஒன்றை சந்திரிக்கா ஆரம்பிப்பார் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

No comments