இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை,தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி படுகொலை!

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஸ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த  தற்கொலைப் படைத் தாக்குதல் 45 க்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் பலியாகியது இந்திய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்திருந்தது,

சில நாட்களுக்கு முன்னர்  ஜம்மு காஸ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு மிக அருகில் நேற்றிரவு முதல் என்கவுன்ட்டர் நடந்தது. முதலில் ராணுவத் தரப்பில் 4 பேரும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் கம்ரான் என்ற பயங்கரவாதி, ஜெய்ஷ்–இ–முகமது அமைப்பின் மூத்த தளபதியாக இருந்து வந்தான். பாகிஸ்தானை சேர்ந்த இவன் கடந்த 14–ந் தேதி  இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், அவன் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த என்கவுன்ட்டரின் முக்கிய நோக்கம், கம்ரான்தான் எனப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கம்ரான்தான் மூளையாக செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது.

No comments