இடித்த இந்து ஆலயங்கள் புனரமைப்பு:ஆமியும் காசு சேர்க்கின்றது?


இலங்கை படைகளால் இடித்தழிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கட்டுவன் துறையிட்டி ஞானவைரவர் ஆலயத்தின் புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்களதும், புலம்பெயர்ந்த மக்களதும் உதவியுடன் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் யுத்த சூழ்நிலையால் சேதமடைந்துள்ள இவ் ஆலயம் புனரமைப்பு செய்யப்படுகிறது.

இதனிடையே யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவ முகாம் பகுதியில் படையினரால் அமைக்கும் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு என்னும் பெயரில் இராணுவத்தினரால் நிதி திரட்டுகின்றது.

பலாலி கூட்டுப்படைத் தளப் பகுதியில் அமைக்கப்படுவதாக கூறப்படும் பிள்ளையார் ஆலயத்திற்கு எனத் தெரிவிக்கப்பட்டு இவ்வாறு வர்த்தக நிலையங்களில் பணம் திரட்டப்படுகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சுன்னாகம் வர்த்தக சங்கத்திற்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களிலேயே சீருடையில் செல்லும் படையினர் தற்போது கடந்த இரு நாட்களாக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments