யாழ்.இராணுவ தளபதி ஆளுநரை சந்தித்தார்!


வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக சந்திப்புக்களில் முனைப்பாகியிருக்கின்ற நிலையில்  இன்று காலை யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி அவரை தேடிச்சென்று சந்தித்துள்ளார்.வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இராணுவ தளபதிக்குமிடையேயான சந்திப்பு இன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வாரம் கண்டியில் பௌத்த மத பீட தலைவர்களையும் கொழும்பில் இந்திய தூதரையும் அவர் சந்தித்துள்ளார்.

இதனிடையே மார்ச் மாதம் அவர் வடக்கில் நடத்தவுள்ள பௌத்த தேசிய மாநாடு உள்ளிட்ட விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அவை தொடர்பில் இன்று ஊடகங்களை சந்தித்து வடக்கு ஆளுநர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments