அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய செயலி !

சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும்  பெண்கள் எங்கு செல்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆப் மூலம் சவுதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை உளவு  பார்ப்பது போல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை சவுதி அரசு மறுத்துள்ளது.

No comments