அரச குடும்பத்தில் சண்டை! பிரிந்தனர் வில்லியம் ஹரி!

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம், ஹரி இடையிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் அவர்கள் பிரிந்துள்ளனர் என சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வளவு காலமுமம் ஒற்றுமையாக ஒற்றுமையாக இரந்தவர்கள் தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டமையால் பிரிந்துள்ளனர்.

தற்போது இருவரும் தங்களின் அறக்கட்டளைப் பணிகள் மற்றும் அரச குடும்பத்து பணிகளைத் தனித்தனியாக கவனிக்கின்றனர். இதற்கு முன்பு அப்பணிகளை சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே கவனித்தனர்.

இளவரசர் ஹரியின் திருமணத்துக்கு முன்பு இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். தற்போது வில்லியம் தன் மனைவி கேத் மிடில்டனுக்கும், ஹாரியின் மனைவி மேகனுக்கும் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஹரி தனது ஆலோசனையை பெற்று தனியாக செயல்பட வேண்டும் என மேகன் விரும்புகிறார். தனது கணவரின் செயல்பாடுகள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இருக்க வேண்டும் என கருதுகிறார். இதன் காரணமாகவே இளவரசர்கள் வில்லியம் - ஹரியின் மனைவிகளுக்குள் சண்டை ஏற்பட காரணம் என கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் என செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மேகன் தனது கணவர் ஹரியுடன் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி பிராக்மோர் காட்டேஜுக்கு தனிக்குடித்தம் போகிறார்.

அங்கு தனி அலுவலகம் அமைத்து ஊழியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

அதேபோன்று இளவரசர் வில்லியமும் தனி அலுவலகம் மற்றும் ஊழியர்களை நியமித்து செயல்படுகிறார்.

இளவரசர் வில்லியமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி இளவரசர் ஹாயின் மனைவி மேகன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனச் செய்தி ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments