இந்த ஆண்டே புதிய அரசாங்கம் அமையுமாம்

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டில் புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

நாடு பாரிய கடன்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும், மக்களுடன் நட்புறவு கொண்ட அரசாங்கம் ஒன்று நாட்டுக்குத் தேவைப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர், தலைமை தாங்கவில்லை என்றும் கூறினார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

No comments