முதலைக் கண்ணீர் வடிக்கும் செம்மணி புதைகுழி நாயகி

2006, 2007 காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கடத்திக் கொன்றவரும் செம்மணிப் புதைகுழி நாயகியுமான சந்திரிக்கா

தானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை தனக்குத் தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல தடவைகள் வடக்குக்குச் சென்றுள்ளேன். அந்த மக்களின் உள்ளக் குமுறல்களை நேரில் பார்த்துள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று பல இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் பேசியுள்ளேன்.

உறவுகளைத் தொலைத்தவர்களின் போராட்டம் நீதியானது – நியாயமானது. அதனை நாங்கள் கொச்சைப்படுத்த முடியாது. நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். பிள்ளைகளைத் தேடும் அந்தத் தாய்மாரின் வலி – வேதனை எனக்கும் தெரியும். அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டியது ஆட்சியிலுள்ள அரசுகளின் கடமை.

இந்த விவகாரத்தை இழுத்தடிக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பணியகம் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” – என்றார்.

No comments