புலிகள் குறித்து பேசிய விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை புலிகள் வடக்கில் மீள் எழுச்சி பெறவேண்டும். என சா்ச்சைக்குாிய கருத்து ஒன் றிணை தொிவித்த அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு எதிா்வரும் மே மாத ம் 10ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறவேண்டும் என உரையாற்றியிருந்த விஜயகலா தனது அமைச்சு பதவியை இழந்திருந்தார். எனினும் தான் உணற்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டதாக கூறி மீள புதிய அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

No comments