பாதாள உலக வேட்டை - துபாயில் தொடரும் கைதுகள்

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர்களுள் ஒருவரான அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் பொலிஸாரால் கடந்த 6 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கொட லொக்கா என அறியப்படும் குறித்த பாதாள உலக குழு தலைவர் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக  அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்தூரே மதூஷ் உள்ளிட்டவர்களை தற்போது விடுவிக்க முடியாது என டுபாய் நாட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
டுபாய் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் அவர்கள் உள்ளிட்ட 39 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுள் 8 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மதூஷ் உள்ளிட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என டுபாய்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மாக்கந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக அந்த நாட்டின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதானவர்கள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தூதரகங்கள் ஊடாக முழுமையான அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாக்கந்துரே மதூஸுடன் டுபாயில் கைதாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு, இலங்கையில் சட்டத்தரணி குழு அங்கு சென்றிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த சட்டத்தரணிகள் சந்தேகநபர்களை சந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடொன்றில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்காக, இலங்கையின் சட்டத்தரணிகளால் அந்த நாட்டின் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது . இருந்தாலும், சட்ட ஆலோசனை வழங்கமுடியும்.

No comments