மகிந்த ஆட்சியையே புதுடில்லி விரும்புகிறதாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, புதிய அரசாங்கத்தையே இந்தியா விரும்புகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


கொழும்பில் இன்று ( 11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறிவை வருமாறு,

” பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.

அதில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக பிரதானிகள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இவ்வாண்டுக்குள் மாற்றமொன்று நிகழும் என அவர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அதுமாத்திரமின்றி நாட்டில் மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கமொன்று தோற்றம் பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால், ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. பத்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய அடித்தள கொள்கை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.

இது தெற்கிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. வடக்கு- கிழக்கையும் உள்ளடக்கிய கொள்கை திட்டமொன்றை ஸ்தாபிப்பதே எமது கட்சியின் குறிக்கோள்” என்றார்  பீரிஸ்.

No comments