மாற்றுத்திறனாளி முச்சக்கர நாற்காலியில் கொழும்புநோக்கி நல்லிணக்க பயணம்


இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளைஞன் முச்சக்கர நாற்காலியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளாா். 
தமிழ் மாற்று திறனாளிக் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மேற்படி பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 
இந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் மாற்று திறனாளி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பணிக்கவுள்ளாா். 
இந்த பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் சமாதனம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவேண்டும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். 
என மௌஹமட் அலி கூறியுள்ளாா். 

No comments