பறிபோகின்றது வடமராட்சி கிழக்கு: சுமந்திரனுக்கோ வாக்குவேட்டை?


வடமராட்சி கிழக்கில் தனது தொடர் அரசியல் பயணத்திற்கான  அத்திவாரத்தை நாட்ட பாடுபட்டுவரும் சுமந்திரன் மறுபுறம் வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதி வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் தேசியப்பூங்கா எனும் பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஆதiவை வழங்கிவருகின்றார்.

சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தொடுவாய்க்கு சற்று அப்பால்வரை சுவீகரிக்கப்பட்டுள்ளது.தெற்க்கு பக்கமாக ஆனையிறவு தட்டுவன்கொட்டி போற்ற பிரதேசங்களும் உள்ளடங்குகிறது.

வடமராட்சி கிழக்கில் மட்டும் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான வெற்றி லைகேணி முள்ளியான் கேவில் ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாகவே சுவீகரிக்கப்பட்டுள்ளது.இதில் சுமார் 1400 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள் இது அம் மக்களின் பூர்வீக நிலமாகும் இங்கு 6000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் வடமரட்சி கிழக்கில் மூன்று பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்ட கிராமங்களான இயக்கச்சி மற்றும் தட்டுவன் கொட்டி உட்பட ஐந்துக்கு மேற்பட்ட பாடசாலைகளும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் பதினைந்துக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் உட்பட மக்களுடைய சகல உட்கட் டுமானங்கலகும் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை அப்பிரதேச மக்கள் தாம் சுண்டிக்குளம் தேசிய பூங்கா திட்டத்தையே எதிர்ப் பதாகவும் இத் தேசிய பூங்கா திட்டத்தினை கைவிட்டு ஆரம்பத்தில் காணப்பட்ட சரணாலயக் காணிகளுக்கு மாத்திரம் எல்லையிடுமாறு மக்கள் கோரி வருகின்றனர். ஆரம்பத்தில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் ஆரம்ப காலத்தில் 25ஆயரத்து 550 ஏக்கர் நிலப்­லபரப்பினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 48347 ஏக்கர் வரையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பூங்காவிற்க்காக சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களில் இரவோடு இரவாக எல்லைக்கற்கள் நடும் திட்டம் கணிசமாக நிறைவடைந்துள்ளது.

No comments