திருநெல்வேலி போராட்டம் பிசுபிசுத்துப்போனதா?


திருநெல்வேலி சந்தையில் இன்று முன்னெடுக்கப்பட்ட வியாபாரிகளது போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
முதலாம் மாடியில் மரக்கறி வியாபாரயொருவர் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் வியாபாரம் செய்ததால் அதனை அகற்றும்படி பிரதேச சபை ஊழியர்கள் எழத்துமூலம் அறித்தல் வழங்கியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசிலர் இன்று மட்டும் வியாபார நடவடிக்ககைகளில் ஈடுபடவில்லை ஏனைய வர்த்தகர்கள் சட்டத்தை மதித்து காலையிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.சந்தை வழமைபோல் இயங்குகிறதென நல்லூர் பிரதேசசபை தெரிவித்துள்ளது. 

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் அந்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியே திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.;.

No comments