சுமந்திரனிற்கு மாலை:சரவணபவனிற்கு இல்லவேயில்லை!


ரணில் அரசிற்கு எவ்வளவு தான் முண்டுகொடுத்தாலும் கூட்டமைப்பில் சுமந்திரனை தவிர்ந்த எவரையும் மதிப்பதில்லையென்பது தெரிந்த கதையேதான்.இன்று; நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்துக்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் கவனிப்பாரற்று மற்றொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கைவிடப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் மாநகர முதல்வருக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கோ கிடைக்காத மாலை மரியாதை அமைச்சர் சம்பிக்கவிற்கும் ரணில் அரசின் நிழல் அமைச்சர் சுமந்திரனிற்கும் மட்டுமே கிடைத்திருந்தது.

தனக்கு மாலைகள் விழாத சீற்றத்தில் இடையிலேயே நிகழ்விலிருந்து சரவணபவன் வெளியேறிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments