அறிக்கை மேனியா:தப்பியோடும் அரசியல்வாதிகள்!


யாழில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற நிலையில் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட தொலைக்காட்சி நிறுவனம் தொல்லை தருவதாக அரசியல் தலைவர்கள் சீற்றம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் அந்த தொலைக்காட்சி நிறுவன அழைப்புகளை கண்டால் தலை தெறிக்க ஓடுவதும் தொடர்கின்றது.

இதனிடையே இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் வீரசிங்கம் மண்டபம் வருகை தந்திருந்த சுமந்திரன் குறித்த நபருடன் புகைப்படமெடுத்துள்ளதுடன் அதனை தனது ருவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்  செவ்வாய்க்கிழமை மாலை (19) புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றது. குறித்த வன்முறைச் சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களும் செய்திகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போதே காவல்துறை தடையினை தாண்டி தடயவியல் பகுதியினுள் சென்றிருந்த  குறித்த நபர் வெளியேற்றப்பட்டிருந்தார்.அப்போது தான் தாக்கப்பட்டதாகவும் அவர் முறையிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த தாக்குதலினை கண்டித்து அறிக்கை விடுமாறு அனந்தி,சுரேஸ்,கஜேந்திரன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியென தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு கண்டன அறிக்கை வெளியிட கோரப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த நபர் நிதி மோசடி காரணமாக சிறையிலிருந்து திரும்பியிருந்த நிலையில் உன்னதமான உயிர் ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கெர்டுத்த ஊடகத்துறை மத்தியில் திருட்டு மோசடி காரணமாக கைதான நபருக்கு ஆதரவளிப்பதா கேள்வி எழுப்பி தமிழ் ஊடக அமைப்புக்கள் இது பற்றி வாயn திறக்காதிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments