பாகிஸ்தானுக்கான விமானசேவைகளை இரத்துச் செய்தது சிறிலங்கா

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பதற்றநிலை இன்று தீவிரமடைந்துள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

அத்துடன் பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து,கொழும்பில் இருந்து கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

No comments