ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள்


சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர்.

மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோன்றே மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நேற்றைய நிகழ்வில் அமர்ந்திருந்தனர்.


இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், 2015 அதிபர்ட தேர்தலில் ஜோன் அமரதுங்கவின் பங்களிப்பை தன்னால் மறக்க முடியாது என்று கூறினார்.

அத்துடன், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் என்பதால் தான், அவரால் நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments