பணிந்தார் மங்கள - மீண்டும் பணியில் சார்ள்ஸ்


சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி. எஸ். எம். சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை இன்று ( 05) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது சுங்கப் பணிப்பாளரின் பதவி நீக்கம் தொடர்பிலும்இ அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் குறித்தும் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

சுங்கப் பணிப்பாளரின் அசமந்தமான செயற்பாடுகளை பட்டியலிட்டுக்காட்டியுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீரஇ அவரை பதவி நீக்கியதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

அவருக்கு மூன்று மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்படும். எனவேஇ உரிய வகையில் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுஇ தனது தீர்மானத்தை மீளப் பெற்றார்.

P.ளு.ஆ. சார்ள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் சுங்க தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

நியாயமான காரணங்களை முன்வைக்காது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments