போதை வியாபாரிகளால் தாக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தேசிய போதை ஒழிப்பு வாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளா்களை காட்டிக் கொடுத்த மைக்காக பாடசாலை மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று கிளிநொச்சியில் கவனயீா் ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி காவல் நிலையம் வரை சென்றடைந்து.




அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது. போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்போம், போதை அது சாவின் பாதை, வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம், போதைப் பொருளிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்போம்,கஞ்சாவையும் கசிப்பையும் குடித்து உன் வாழ்வை சிதைக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தவாறு பேரணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

No comments