“ஒப்பரேசன் கஞ்சா” நடவடிக்கையை இன்று ஆரம்பித்தது பொலிஸ்

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் தொடா்ச்சியாக அதிகளவான கஞ்சா மீட்கப்பட்டுவரும் நி லையில் அவற்றை பூரணமாக கட்டுப்படுத்தும் நோக்கில் “ஒப்பரேசன் கஞ்சா” என்ற பெயாில் பொலிஸாா் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனா்.

இதற்­காக வடக்கு மாகா­ணத்­தின் வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 100 பொலி­ஸார் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­னா். யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த இரண்டு வாரங்­க­ளுக்­குள் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

மேலும் பல்­வேறு இடங்­க­ளி­லும் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸா­ருக்கு இர­கி­ச­யத் தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. இத­னைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் ‘ஒப்­ப­ரே­சன் கஞ்சா’ நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

காங்­கே­சன்­து­றைப் பிராந்­தி­யத்­துக்கு உள்­பட்ட வல்­வெட்­டித்­துறை, பருத்­தித்­துறை, அச்­சு­வேலி, இள­வாலை ஆகிய 4 பொலிஸ் பிரி­வுக்­கும் உட்­பட்ட பகு­தி­க­ளில் பொலி­ஸார் கள­மி­றக்­கப்­பட்டு தேடு­தல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

No comments