செய்தி தவறென்கிறார் பணிப்பாளர்?


யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை. விசாரணைகளும் நடைபெறவில்லையென யாழ்.போதான வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலை 500 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். 

வைத்தியசாலை தொடர்பில் வெளியாகும் தவறான செய்தியால் வைத்தியசாலை சேவைக்கு இடையூறாக உள்ளது. அவ்வாறான செய்திகள் வெளிவந்தமை தொடர்பில் காவல்; நிலையத்தில். முறைப்பாடு செய்துள்ளோம். இந்த செய்தியால் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தாதியர்கள் தவறிழைத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் உள்ளக விசாரணைகள் நடைபெற்றிருக்கும். ஆனால் அவை எதுவும் நடைபெறாத நிலையில் அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அன்மையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட  நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்தமையில் குறைபாடு  உள்ளது என நோயாளியின் உறவினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் நடைபெறுகின்றன. 

பெரும்பாலும் பெண் தாதியர்களே இங்கே பணியாற்றுகின்றனர். இந்த செய்தியால் அவர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாதியர்களின் மனவுளைச்சல் காரணமாக சேவையாற்றுவதில் தடைகளை எதிர்கொண்டுள்ளனர். அதனால் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே  வைத்தியசாலையில் தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றன. இவ்வாறான செய்தியால் தாதிய சேவைக்கு வர பெண்கள் தயங்குவார்கள்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் சில ஊடகங்களில் வெளியிடப்;பட்டிருந்தது.

இதனை கண்டித்து இன்று செவ்வாய்கிழமை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments