மண்டையன் குழு படுகொலைகள் - தகவல்கள் திரட்ட இளைஞர்கள் ஆர்வம்



ஈபிஆர்எல்எவ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்திய மாநாட்டின்போது வெளியிட்ட ஆவணப் புத்தகம் ஈபிஆர்எல்எவ் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக் கட்சி புலி நீக்க அரசியல் செய்ய முற்படுகிறது ஏன மேடைகளில் கூவிவந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான புத்தகம் ஒன்றினை வெளிட்டுள்ளமையே தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாடுடைய முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் கைகளினால் குறித்த புத்தகத்தை சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட வைத்தது விக்கினேஸ்வரனைப் படுகுழியில் தள்ளும் ஈபிஆர்எல்எவ்இன் ஆரம்ப நடடிக்கையின் ஒரு அங்கம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

வெளியீட்டு நிகழ்வுகளுக்கு தான் அழைக்கப்பட்டார் முன்கூட்டியே புத்தகத்தைப் பெற்று அதனை நன்கு படித்து ஆராய்ந்துவிட்டே முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு செல்லச் சம்பதிப்பது வழக்கம் எனவும் ஈபிஆர்எல்எவ் விடயத்தில் விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச்சந்திரனினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆவண வெளியீடு தொடர்பில் அவருக்கு முன்னறிவிப்பு வங்காமல் இரகசிய ஏற்பாடாக மேடையில் வைத்தே தெரிவிக்கப்பட்டது என விக்கினேஸ்வரனுக்கு நெருக்கமான ஆதரவு அணியினர்  கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த ஆவணப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் எனக் கூறி ஈபிஆர்எல்எவ் ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் தான் பழசுகளைக் கிழறும் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர் தமிழ் இளைஞர்கள். மண்டையன் குழுத் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இயக்கிய மண்டையக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சகோதரப் படுகொலைகள் குறித்த தகவல்களை இளைஞர்கள் கேட்டறிந்துவருவதோடு ஈபிஆர்எல்எவ்இன் படுகொலைகள் குறித்த தரவுகளையும் சேகரித்துவருகின்றனர்.

No comments