ஒற்றுமை கொள்கைக்கானதா?


ஒற்றுமையானது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப்போராடுவதாக இருக்கவேண்டும். சுயநலத்திற்காக இருக்கக்கூடாது. நாம் இவற்றை இவ்வாறு மாறு பட்டவிதத்தில் எடுத்துச் செல்வதுதான் நாம் மற்றவர்களில் இருந்து வேற்றுமைப்பட்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றதெ முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எங்கள் காலத்தில் எமக்கு உரிமைகள் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் எம்முடைய காலத்தின் பின்னரும் எமது கொள்கையின் அடிப்படையில் எமது போராட்டத்தைக்கொண்டு நடத்தக்கூடியதாக எமது அரசியல் யாப்பு தயாராக்கப்பட்டுள்ளது. எமது இளைஞர்கள் நாம் விட்ட இடத்திலிருந்து முன்னோக்கி எமது விடுதலைப்பயணத்தில் பயணிக்க நாம் வழி வகுத்துள்ளோமெனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கூட்டமைப்பு போன்ற மரபுரீதியான கட்சிகளில் நாம் காணும் ஜனநாயக மறுப்பு போன்ற குறைபாடுகளை நாம் நீக்கியுள்ளோம். இதனால் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளோம். நேர்மையான பொருத்தமான தகைமையுடைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வழி செய்துள்ளோம். ஊழல்களைத்தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

மேலும் சமஸ்டி வேண்டாம்,வடகிழக்கு இணைப்புவேண்டாம்,பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க ஆட்சேபணை இல்லை,எமக்கு சுயாட்சி தேவையில்லை என்று கூறுவதற்கு எமக்குள் ஒற்றுமை ஏன்? அதைத்தான் எல்லாச் சிங்கள அரசாங்கங்களும் கூறிவருகின்றனவே?
சமஸ்டி தரமாட்டோம், இணைப்பு தரமாட்டோம், சுயாட்சிதரமாட்டோம,; பௌத்தத்திற்கு முதலிடம் வேண்டும் என்பதே அவர்கள் கூறுவது.அவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொண்டோமானால் எமக்கென எதனை நாம் வேண்டிநிற்கின்றோம்?  என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments