முல்லைத்தீவு செம்பமலையில் விபத்து - ஒருவர் பலிமுல்லைத்தீவு- கொக்கிளாய் வீதியில் செம்மலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 50 வயதான முதியவா் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் ஆபத்தான நிலையில் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். செம்மலைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments