விக்னேஸ்வரன் மனு நிராகரிப்பு?


முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து அவரால்; தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அத்துடன் விசாரணைத் திகதியை குறிக்க 15ம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுமுள்ளது.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றின் போது நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லையென தெரிவித்து மீளவும் பா.டெனீஸ்வரனால் மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக  குற்றச்சாட்டை எதிர்த்து அவரால்; தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவையே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமைச்சு பதவியில் தான் நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments