தூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும் மைத்திரி


போதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தூக்கிலிடும் திகதியை நிர்ணயிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர்களைத் தூக்கிலிடுவதற்கான திகதியை அறிவித்தால் சரி எனவும் ஜனாதிபதி தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க இதுவே சரியானதும் இறுதியானதுமான வழி எனவும் ஜனாதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.


இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு மேல் நீதிமன்றால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, மேன்முறையீடுகளிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 20 கைதிகள் தூக்கிலிடவேண்டியவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments