தாதியர்கள் பற்றி பொய்ச்சேதி:மறுதலிக்கிறார் பணிப்பாளர்!


யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை. அவ்வாறான சம்பவம் நடைபெறவே இல்லையென பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த அவர் கருத்து வெளியிடுகையில் வைத்தியசாலை தாதியர்கள் சிலரை தொடர்புபடுத்தி சில போலி இணையங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.அதில் என்னிடம் அதனை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஏதுமே நடந்திருக்கவுமில்லை.என்னுடன் இச்செய்தி தொடர்பாக எவரும் உரையாடவுமில்லை.

இந்நிலையில் பொய்யான செய்திகளை பிரசுரித்து அவர்களிற்கு மனவுளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.போதனாவைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் தொடர்பில் தொடர்புபடுத்தி அநாமதேய இணையங்கள் சில செய்தி வெளியிட்டிருந்ததை கண்டித்து இன்று தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை இன்று    யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போலி இணையங்களின் பரப்புரைக்கு ஏதிராக  போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் !

 

No comments