வட்டக்கண்டல் படுகொலைக்கு அஞ்சலி!


மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டியில் வட்டக்கண்டல் படுகொலையில் உயிரிழந்தவர்களிற்கு கடந்த 30 ம் திகதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டுஅதே நாளன்று மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர் வி.சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர்களான ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் பாடசாலை வளாகத்தினுள் வைத்து இலங்கைப்படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments