கோத்தாவல்ல அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்?


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை தீர்மானம் இல்லையென கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என சிறீPலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.இன்னொருபுறம் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தானே நியமிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

 இதனால் சுதந்திரக் கட்சியில் ராஜபக்ச குடும்பத்தை ஆதரிக்கும் உறுப்பினர்கள் விசனமடைந்துள்ளனர். அதேவேளை, சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ள உறுப்பினர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் கோட்டாபய ராஜபக்சவின் எலிய என்ற அமைப்புக்கு சார்பாக செயற்படும் பௌத்த தேரர்கள் சமரச முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே சர்ச்சைகளிற்கு ஓய்வு கொடுக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை தீர்மானம் இல்லையென மஹிந்த தெரிவித்துள்ளார்.

No comments