இலங்கை சுதந்திர தினத்திலும் யாழில் கஞ்சா?


கஞ்சா கடத்தல்கார்களை நீண்ட தூரம் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 77 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை விசேட புலனாய்வு துறை உத்தியோகஸ்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கடத்தல்கார்கள் இருவரை யாழ் நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதி வரையில் பின் தொடர்ந்து, தென்மராட்சி எல்லை பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
அதன் போது அவர்களிடம் இருந்து 77 கிலோ 340 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டனர். அத்துடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கஞ்சா போதைபொருளையும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வடமராட்சி மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

No comments