மறப்போம் மன்னிப்போமென்கிறார் ரணில்!


வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜநாவில் அரசினை காப்பாற்றும் நகர்வுகளிற்காகவா வருகை தந்துள்ளார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

யாழிலும் சரி ,கிளிநொச்சியில் “யுத்தக்குற்றம்” என்ற வார்த்தையை பிரதமர் ரணில் தனதுரைகளில் நேரடியாக பயன்படுத்தவில்லை.ஆனால் “உண்மைகளை கண்டறிந்து அவைக்குறித்து பேசி மன்னிப்பு கேட்கவேண்டும். தென்னாப்பிரிக்காவிலும் அதுவே நடந்தது.

பழையவற்றை மறப்போம், மேலும் வழக்குகளை பதிவு செய்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, எல்லோருக்கும் மன்னிப்பை கொடுத்துவிட்டு முன்னால் செல்வோம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. கடன் சுமையில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். எனவே பழையனவற்றை மன்னித்து மறப்போம்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே ரணிலின் பேச்சின் போது பிரசன்னமாகியிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக வேடிக்கை பார்த்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments